சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )