ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அற்புதமானது

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அற்புதமானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அற்புதமானது என்று பாராட்டியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் பேட்டி அளித்த போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், ”இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே எல்லாம் தெரியும் , ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தாலும், இஸ்ரேலின் செயல்கள் நிலைத்தன்மையை சீர்குலைக்கவில்லை, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )