
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடித்துள்ளது
நிலவும் மலையுடனான வானிலை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு மண் சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி டாக்டர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுகள்,
கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை மற்றும் மாத்தளை பல்லேபொல மற்றும் அம்பகன்கொரலயா ஆகிய பிரதேசங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் உவாபரணகம,
காலி மாவட்டத்தில் நெலுவ,
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல,
கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை மற்றும் டோலுவ,
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, ருவன்வெல்ல, அரநாயக்க மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அலவ்வ மற்றும் ரிதிகம,
மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை, யடவத்தை,
மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர,
மொனராகலை மாவட்டத்தில் மெதகம, அம்பகமுவ, ஹங்குரன்கெத்த,
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, கலவான, இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, வெலிகெபொல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

