மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்புபிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்புபிரதேச மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மழையுடனான வானிலை தீவிரமடைந்தால் ஏனைய வான் கதவுகளையும் திறப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்ச்ரிக்கப்படுகிறார்கள் .

அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கும் மேலாக நீர் வெளியாகுவதோடு, காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )