
தீபாவளி தினத்தில் வடமாகாணத்தின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்
தீபாவளி தினத்தில் வட மாகாணத்திலுள்ள மதுபானசாலைகள் மூடுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

