240 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

240 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொன்னாலை காட்டுப்பகுதியூடாக நேற்று (14) கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோ கிராம் கஞ்சாவுடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பின்போது இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )