
டிரம்ப் மற்றும் புதினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து என கருதிவரும் இஸ்ரேல் நேற்று (14) அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை நேற்று (14) தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து விவாதித்தனர்.
CATEGORIES Sri Lanka

