சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து அதிகளவாக 12,362 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 28.1 சதவீதம் ஆகும்.

இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 3,740 பேரும், பங்களாதேஷிலிருந்து 2,717 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,439 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 2,403 பேரும் வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )