
ஹஜ் பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் தீ
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் ‘சவுதியா ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான SV 3112 விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, அதன் இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த 250 ஹஜ் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
CATEGORIES India

