
மகளிர் ODI உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியானது
13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்டம்பர் 30-ந் திகதி முதல் நவம்பர் 2-ந் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான ஆட்டங்கள் இந்தியாவின் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களிலும், இலங்கையின் கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளன.
பெங்களூருவில் செப்டம்பர் 30ம் திகதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 5ம் திகதி விளையாடும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், செப்டம்பர் 30ம் திகதி இலங்கையும், அக்டோபர் 9ம் திகதி தென் ஆப்பிரிக்காவையும், அக்டோபர் 12ம் திகதி ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 19ம் திகதி இங்கிலாந்தையும், அக்டோபர் 23ம் திகதி நியூசிலாந்தையும், அக்டோபர் 26ம் திகதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்ளும் வகையில் அட்டவணை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

