
அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்
தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்திகதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் ,
“நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

