வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் இருந்த சடலம்

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் இருந்த சடலம்

இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது .

இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் யார் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )