
அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் இஸ்ரேல்’ – வடகொரியா
மத்தியக்கிழக்கில் போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
KCNA எனப்படும் வடகொரிய அரசின் கீழ் இயங்கும் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
‘அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’
வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார் .
மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம்” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்கும் புற்றுநோய் போன்ற அமைப்பாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளியாகவும் இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளது.

