தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, உரையாற்றிய செனவிரத்ன, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எந்த மாற்றமும் இல்லாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும், அது 2029 க்குப் பிறகும் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரீட்சையுடன் தொடர்புடைய தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை பரீட்சைத் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முறையாகக் குறைப்பதற்கும், புலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித் தன்மையால் மாணவர்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )