
சீரற்ற வானிலை முன்னெச்சரிக்கையாக பதுளை மாவட்டத்தில் பாடசாலைகள் இன்று காலை 11 மணியுடன் மூடப்படுகிறது
பதுளை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்குள் மூடப்படுவதுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்புகள் மற்றும் மண்சரிவுகள் தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய எச்சரிக்கை அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

