
சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் கடும் மழை மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு சம்பவங்கள் காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், இன்று (09) பிற்பகலுக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பின்வரும் பகுதிகளில் உள்ள மக்களிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
கண்டி மாவட்டம் – மினிபே, மெததும்பர, பன்வில, தொலுவ, தெல்தோட்டை, உடுதும்பர
பதுளை மாவட்டம் – கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுனுகல, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி எல, வெலிமட, மீகஹகிவுல, ஊவா பரணகம
மாத்தளை மாவட்டம் – வில்கமுவ, அம்பங்கங்க கோரள, ரத்தோட்டை, நாவுல, உக்குவலை, லக்கல பல்லேகம
நுவரெலியா மாவட்டம் – வலப்பனை, நிலடந்தஹின்ன, மதுரட்ட, ஹங்குரான்கெத்த, நுவரெலியா
மக்கள் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

