
”அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்”
ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா இன்று (22) தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ”ஈரான் மீது நடந்த தாக்குதல் வெற்றியடைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரெிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயோத்துல்லா அலி காமேனி, ”ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

