
எங்களின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய டிரம்ப்,
“இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.
ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.
கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.

