ஈரானுக்கு உதவ நாங்கள் தயார் ; ரஷ்யா அறிவிப்பு

ஈரானுக்கு உதவ நாங்கள் தயார் ; ரஷ்யா அறிவிப்பு

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் திகதி ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.

ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இந் நிலையில், ஈரானுக்கு உதவ தயராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கூறியிருப்பதாவது: ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்குக்கு உதவ தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )