பிரதமருக்கும் தென் ஆஸ்திரேலியாவின் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் தென் ஆஸ்திரேலியாவின் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

தென் ஆஸ்திரேலியாவின் ஆளுநர் திருமதி Frances Adamson AC அவர்கள் ஜூன் 22ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தார்.

ஆளுநரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாகக் கல்வித் துறையில் பேணப்பட்டு வரும் நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி விசேடமாக நினைவு கூறினார்.

கல்விச் சீர்திருத்தம், தொழிற்பயிற்சி மற்றும் நிறுவன கூட்டாண்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மீதும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சமீபகால பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் போது மக்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ள விதம் பற்றி பிரதமர், பிரதிநிதிகள் குழுவிற்கு எடுத்துரைத்தார். உயர்கல்வி கொள்கையை வலுப்படுத்துதல் மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், தொழிற்கல்வியின் சீர்திருத்தங்கள் உட்படத் தொடர்ச்சியான கல்வி சீர்திருத்தங்கள் பற்றியும் பிரதமர் விவரித்தார்.

இலங்கையில் ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் சிரேஷ்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் குழுவினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிக்கா போகஹவத்த, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் வெளியுறவு அமைச்சின் கிழக்காசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )