இ.தொ.காவின் நுவரெலியா உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பதவிப் பிரமாணம்

இ.தொ.காவின் நுவரெலியா உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பதவிப் பிரமாணம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நேற்று (23) பதவிப் பிரமானம் செய்துக்கொண்டார்கள்.

இதன் அடிப்படையில் நேற்று (23) நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக இ.தொ.கா வின் சிவன்ஜோதி யோகராஜ், நுவரெலியா பிரதேச சபை தவிசாளராக வேலு யோகராஜ், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளராக ரதிதேவி, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமனி பிரசாத் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக தமது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

image

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், முன்னிலையில் பதவி ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்களிடம் பத்திரத்தை சமர்ப்பித்தார்கள்.

image
image

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்த்தர் என பலர் கலந்துக்கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )