ஜன்னல் திரையை மூட மறந்த ஜோடி ; போக்குவரத்து நெரிசலால் திணறிய மக்கள்

ஜன்னல் திரையை மூட மறந்த ஜோடி ; போக்குவரத்து நெரிசலால் திணறிய மக்கள்

காதலர்கள் இருவர் பிரபல ஹோட்டலில் ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் பதிவாகியுள்ளது.

காதலர்கள் இருவர் ராஜஸ்தானில் உள்ள பிரபல ஹோட்டலில் ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்றவர்கள், இதனை கவனித்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை நோக்கி வேடிக்கை பார்க்க தொடங்கியுள்ளனர்.

இதனால் அந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அந்த அறையை தட்டி, ஜன்னலை மூட செய்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )