ஜூன் 2 பாஸ்போர்டுக்கான டோக்கன் வழங்கும் நேரத்தைகுடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

ஜூன் 2 பாஸ்போர்டுக்கான டோக்கன் வழங்கும் நேரத்தைகுடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது

வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வழங்குவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்தில் ஒரே நாள் மற்றும் சாதாரண பாஸ்போர்ட் பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் அட்டைகளை காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அன்றைய தினம் , ஒரு நாள் சேவையின் கீழ் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் ஒரே நாள் சேவையின் கீழ் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பாஸ்போர்ட் பெற வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்பதால், முதல் நாள் இரவில் இருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும், சம்பந்தப்பட்ட நாளில் காலை 6 மணிக்குப் பிறகு வந்து தேவைகளை எந்தத் தடையும் இன்றி பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது .

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதற்கு அல்லது பாஸ்போர்ட்களை விரைவாகப் பெறுவதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வளாகத்திற்குள் அல்லது வெளியே எந்தவொரு தரகருக்கும் அல்லது வேறு நபருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ,
பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தை கவுண்டரில் மட்டுமே செலுத்தி,பாஸ்போர்ட்டைப் பெற வேண்டுமென திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )