
கடலில் சிக்கிய மற்றுமொரு மீனவர் உயிருடன் மீட்புகாணாமல் போன மற்றைய மீனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன
தெவுத்துர மற்றும் பேருவளை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கவிழ்த்த மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவர் படகில் சிக்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீனவரின் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று மாலை தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகில் 5 மீனவர்கள் பயணித்தனர் .
இன்று காலை மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட போதிலும், மேலும் நான்கு பேர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,
அவர்களின் உடல்கள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் காணாமல் போன ஏனைய இரண்டு மீனவர்களைத் தேடும் பணியை கடற்படை மேற்கொண்ட போது படகில் சிக்கிய நிலையில் மீனவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மற்றொரு மீனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன .

