போலந்திலிருந்து முதல்முறையாக இலங்கை வந்த விமானம்

போலந்திலிருந்து முதல்முறையாக இலங்கை வந்த விமானம்

போலந்திலிருந்து இலங்கைக்கு முதலாவது விமானம் ((Inogaral Flight) நேற்று இரவு (23) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸின் பதிவு எண் 3 Z- 7648 ஐக் கொண்ட போயிங் – 737 விமானம், நேற்று இரவு 10.10ற்கு போலந்தின் வார்சாவிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தில் 180 பயணிகள் மற்றும் 09 பணியாளர்கள் இருந்தனர்.

இதற்குப்பிறகு போலந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானங்கள் வாரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், மார்ச் 15, 2026 வரை போலந்தின் வார்சாவிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் வரும் பயணிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகள், சிகிரியா, தம்புல்லா, கண்டி, நுவரெலியா மற்றும் யால ஆகிய இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போலந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பயண நிறுவனத்தின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )