
யாழ் தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ‘யாழ். தேவி’ ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்தில் உயிரிழந்தவர் ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய இரத்தினராசா கிருஷ்ணமோகன் என்ற குடும்பஸ்தரா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவைக் காப்பாளர் அப்பகுதியில் இருக்கவில்லை எனவும், குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

