தாய்லாந்திலிருந்து தபால் மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

தாய்லாந்திலிருந்து தபால் மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் ரூ.60 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை மத்திய தபால் நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் 6 கிலோகிராம் 201 கிராம் எடையுள்ளதாக சுங்க பணிப்பாளரும் , சுங்க ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

விசேட பார்சல் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை ஒருகொடவத்த சுங்க முற்றத்தில் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கலனில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டதாக பவந்த சந்தன புஞ்சிஹேவா கூறினார்.

சுங்கத் தடுப்புப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், கொள்கலனில் மஞ்சள் மட்டுமே இருந்ததாகவும் புஞ்சிஹேவா கூறினார்.

மஞ்சள் கையிருப்பின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )