
இன்று முதல் முதல் 27 ஆம் திகதி வரை மேலதிக பஸ்கள்பண்டிகைக் கால பஸ் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்க 1958 என்ற 24 மணி நேர சேவை
பண்டிகை காலத்தையொட்டி இன்று முதல் முதல் 27 ஆம் திகதி வரை மேலதிக பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபைத்தலைவர் சஜீவ நந்தன கனகரட்ன தெரிவித்தார்.
நேற்று ஊடக சந்திப்பை நடத்திய அவர், ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள இடையூறு மற்றும் பயணிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த விசேட பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.
இன்று கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு 107 பஸ்கள் மேலதிகமாக இயக்கப்படுகின்றன.
அதேபோன்று 25 ஆம் திகதி 75 விசேட பஸ்களும் 26ஆம் திகதி சுமார் 60 விசேட பஸ்களும் 27 ஆம் திகதி 52 விசேட பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து சபைத்தலைவர் தெரிவித்தார்.
வடக்கு , கிழக்கு , வடமேல் , சப்ரகமுவ ,கம்பஹா , களுத்துறை , ருகுன , ஊவா ,கண்டி , நுவரேலியா, ராஜரட்ட ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபைத்தலைவர் சஜீவ நந்தன கனகரட்ன தெரிவித்தார்.
இதேவேளை மேலதிக பஸ்கள் அல்லது இது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு 1958 என்ற 24 மணி நேர சேவை இலக்கத்திற்கு அழைக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

