ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன 8 பேரும் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன 8 பேரும் மீட்பு

தலாத்ஒயா பொலிஸ் நிலையத்திற்க்கு உட்பட்ட ரட்டே முல்லே பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் குழு ஒன்று நேற்று (28) காலையில் ஹந்தான பகுதிக்குச் சென்றிருந்தது.

ஹந்தான மலை உச்சிக்குச் சென்றிருந்த மாணவர்கள் மாலையில் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, ​​மூடுபனி மற்றும் மழை தொடங்கியது, அந்த நேரத்தில் பாதை மாறியதால் 8 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.

image

பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவமும் பொலிஸாரும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு அந்தக் குழுவைக் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு, 8 மாணவர்களும் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )