
இன்று முதல் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்
இன்று (30) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போது அடையாளம் காணப்பட்ட அபாயப் பகுதிகளில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை, மாத்தளை, பதுளை, மொனராகலை, காலி, கல்முனை, களுத்துறை, கண்டி, கம்பஹா, குருநாகல், கேகாலை, கொழும்பு மாநகர சபை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்திற்கு முப்படைகள், இலங்கை பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை, பிற தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் ஆதரவு வழங்குவார்கள், இதற்காக பொதுமக்களும் தமது ஆதரவை வழங்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

