இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று (29) அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து  கைது செய்யப்பட்ட  ராமேஸ்வர 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )