Blackmail படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Blackmail படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், குட் பேட் அக்லி என தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தற்போது பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )