
இரசாயன ஆலையில் வெடி விபத்து ; பலி எண்ணிக்கை உயர்வு
தெலங்கானாவில் இரசாயன ஆலையில் ஒன்றில் நேற்று (30) ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் என நேற்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
குறித்த விபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
CATEGORIES India

