கொஸ்கமவில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடுதாய் மகள் உட்பட மூவர் காயம்

கொஸ்கமவில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடுதாய் மகள் உட்பட மூவர் காயம்

கொஸ்கம, சுடுவெல்ல பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் பெண் ,அவரது மகள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அவிசாவளையைச் சேர்ந்த 30 வயது தாய், 12 வயது மகள் மற்றும் 44 வயதுடைய நபர் ஆகிய மூவர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுவதுடன் , மேலதிக விசாரணைகளை கொஸ்கம போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )