பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து ஒருவர் பலி

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து ஒருவர் பலி

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் பயணித்த ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூர்து மாவத்தை நோக்கிச் செல்லும் கிளை வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது .

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவர் ,பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நீர்கொழும்பு, பெரியமுல்லயில் வசிக்கும் 61 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )