ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால்  ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து  உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )