
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங்கிறக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் நேற்று (10) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, நாட்டில் மருந்துகளின் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது அமெரிக்க தூதுவர் அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கு தனது இணக்கத்தை தெரிவித்தார்.
நாட்டின் இலவச சுகாதாரம் மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் அமெரிக்க தூதரகத்தையும் சுகாதார அமைச்சையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் பங்கேற்றனர்.

