பிட்சாட் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம்

பிட்சாட் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம்

எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் ஜாக் டோர்சி. இவர் ‘பிட்சாட்’ (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகள், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )