கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு ; அதுருகிரிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு ; அதுருகிரிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார். 

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபருக்கு வாகனம் வழங்கி தப்பிச் செல்ல உதவிய சந்தேகத்தின் பேரில் அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )