
புகையிரதத்தில் மோதி யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று (18) காலை பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கல்லெல்ல சுடுநெலும் கிராமப் பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, இறந்தது 15 வயதுடைய 8 அடி உயரமுள்ள காட்டு யான ஆகும்.
ரயிலில் மோதிய காட்டு யானை ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையைக் கடந்து ஒரு வீட்டின் அருகே கீழே விழுந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.



CATEGORIES Sri Lanka

