
நாடாளவிய ரீதியில் ஒரே வாரத்தில் 3,283 பேர் கைது
ஜூலை 7 முதல் 17 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3,283 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பை அடையாளம் கண்டு அடக்கவும், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யவும் நாடு முழுவதும் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஹெராயின் கடத்தலுக்காக 1,006 சந்தேக நபர்களும், ஐஸ் போதைப்பொருள் கடத்தலுக்காக 1,129 பேரும், கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்காக 1,039 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 1.733 கிலோகிராம் ஹெராயின், 2.375 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 24 கிலோகிராம் கஞ்சா மற்றும் 2,464 போதைப்பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

