
கெணத்த காணோம் படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் யோகி பாபு புதிதாக நடித்துள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதனிடையே, ‘கெணத்த காணோம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ‘கெணத்த காணோம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் ‘கெணத்த காணோம்’ படம் வருகிற 13-ந்திகதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

