இலங்கை சிறைச்சாலை             நெரிசலில் திணறும் கைதிகள்                             750 பேருக்கான இடத்தில் 3,557 கைதிகள் சிறைவைப்பு

இலங்கை சிறைச்சாலை நெரிசலில் திணறும் கைதிகள் 750 பேருக்கான இடத்தில் 3,557 கைதிகள் சிறைவைப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,095 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெலிக்கடை சிறைச்சாலையில் 750 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,557 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் .

கொழும்பு மகசின் சிறையில் 625 பேர் தங்கக்கூடிய இடத்தில் 2,985 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் மாத்திரம் 2,426 கைதிகள் உள்ளதாகவும் , 385 பேர் தங்கக்கூடிய இடத்தில் அவர்களை வைத்திருப்பது அதிக நெரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையிலும் 220 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் 561 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )