வங்காளதேசத்தில் பாடசாலை மீது  விமானம் விழுந்து விபத்து ; 27 பேர் பலி

வங்காளதேசத்தில் பாடசாலை மீது விமானம் விழுந்து விபத்து ; 27 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பாடசாலை வளாகத்தின் மீது நேற்று (21) வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )