
குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
இராஜகிரிய பகுதியில்பத்தரமுல்ல கலால் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 12 மில்லியன் ரூபாய் பொறுமதியுடைய 2 கிலோகிராம் குஷ் வகை போதைப்பொருளுடன் நேற்று (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிப்பிட்டிய – தலவதுகொட பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல கலால் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

