தொழில்துறையில் எதிர்காலத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்

தொழில்துறையில் எதிர்காலத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்

தொழில்துறையில் எதிர்காலத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற SME வர்த்தக கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த தொழில்முனைவோர் வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்தி வங்கி தற்போது நாடு முழுவதும் பதினைந்தாயிரம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து தங்கள் தொழில்களை வலுப்படுத்திய 170 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.

மேலும், மூலப்பொருட்கள், நிலம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகள் உட்பட தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களில் பாடசாலை பாடத்திட்டத்திலும் தொழில்முயற்சியாண்மை தொடர்பான விடயங்கள் சேர்த்துள்ளதாகவும், எதிர்கால சந்ததியினரை தொழில்முனைவோராக மாற்றுவதற்கான அடித்தளத்தை ஏற்கனவே அமைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த சூழ்நிலையில், இலங்கை விரைவில் உலகளாவிய குறியீட்டில் முதலிடத்தில் இருக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )