
திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்
இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

