
அமெரிக்காவிற்கு விடுக்கபட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியிலும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதவியிட்டுள்ளார்.
“பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கும் சுனாமி பாதிப்பு உள்ளது. ஆகவே உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

