
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை (31) முதல் அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையைப் பெற முடியும்.

