
மதராஸி ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.
இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Cinema

